மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பழநி: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நகர தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நேற்று துவங்கப்பட்ட வெற்றிப் பயணம் திட்டத்தில் அரசு பஸ்களில் பெண்கள், பெண் குழந்தைகள், திருநங்கைகள், திருநம்பிகள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.