உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாவட்ட கிரிக்கெட் போட்டி

 மாவட்ட கிரிக்கெட் போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கிரிக்கெட் 'லீக்' போட்டிகள் ஆர்.வி.எஸ்., என்.பி.ஆர்., ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி மைதானங்களில் நடந்தது. திண்டுக்கல் பார்வதீஸ் கலை, அறிவியல் கல்லுாரி அணி 20 ஓவர்களில் 78 ரன்கள் (அஜய் 6/27) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஜி.டி.என். கல்விக்குழும அணி 10.4 ஓவர்களில் 80/2 ரன்கள் (பணபாண்டி 44) எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் ஜி.டி.என்., கலை, அறிவியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 159/7 ரன்கள் (அருள்குமார் 42, சூர்யா 41. அனீஸ்கார்த்திக் 3/23) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 151/8 ரன்கள் (தர்னேஸ்வரன் 65) எடுத்து தோல்வி அடைந்தது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 104/9 ரன்கள் (விஷ்ணுகார்த்திக் 41, சிபிதர்ஷன் 3/13) எடுத்தது. எதிர்த்து விளையாடிய நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி 20.2 ஓவர்களில் 105/7 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்விக்குழும அணி 24.3 ஓவர்களில் 132 ரன்கள் (கவுதமன் 30, கவுதம் 5/22) எடுத்தது. காந்தி கிராம கிராமிய பல்கலை அணி 22.4 ஓவர்களில் 116 ரன்கள் (ஐயப்பன் 3/19) எடுத்து தோல்வி அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ