உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., கலை,அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்டம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடினர். நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, நாட்டுநலப்பணித்திட்டம் இணைந்து திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள லேட்டர்ன் சாரிட்டபிள் டிரஸ்ட்டில் தீபாவளி பண்டிகையினை கொண்டாடினர். முதியவர்களுக்கு ரூ.30,000 மதிப்புள்ள சேலை, வேட்டி, கைலி, போர்வை, துண்டு, அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான எண்ணெய், சோப்பு, உணவுப்பொருட்கள், இனிப்புகள் வழங்கினர். என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி சரவணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !