மேலும் செய்திகள்
போதை தடுப்பு ஊர்வலம்
01-Oct-2025
பாலசமுத்திரம், : பழநி, பாலசமுத்திரம் அருகே வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அரிமா சங்கம் சார்பில் தீபாவளியை முன்னிட்டு மளிகை, காய்கறி, புத்தாடை, பட்டாசு,இனிப்புகள் வழங்கப்பட்டன. பழநி பாலசமுத்திரம் பேரூராட்சி கற்றாழம் பாறை பகுதியில் பழங்குடி மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு இங்கு வாழும் மக்களுக்கு தங்கரத அரிமா சங்கம் சார்பில் மளிகை, பட்டாசு, வேஷ்டி, சேலை, அரிசி, காய்கறி, இனிப்புகள் உள்ளிட்டதை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், பி.பி.என் மருத்துவமனை விமல்குமார், அரிமா சங்க தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர்கள் சிவக்குமார், காளீஸ்வரன், பொருளாளர் ரவிச்சந்திரன், வருவாய்த்துறை, வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
01-Oct-2025