ஆடு, மாடுகளை மின்கம்பத்தில் கட்டாதீங்க ... மின் அதிகாரி அறிவுரை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்வதால் ஆடு, மாடுகளை மின்கம்பத்தில் கட்டாமல் பாதுகாக்க மின் மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.அவர் கூறியதாவது: மின் கம்பி அறுந்து கிடந்தால் அதனை தொடாமலும் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். டிராக்டர், லாரியில் அளவுக்கதிகமாக பாரம் ஏற்றிச்செல்லும்போது மின்பாதை கம்பிகளை உரசாமல் கவனமாக செல்ல வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மின்கம்பம், இழுவை கம்பியில் கட்டுவதை தவிர்க்க வேண்டும். மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு எர்த்லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கரை பொறுத்த வேண்டும். இதோடு பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றி விபத்தினை தவிர்க்கலாம். மின்சாரம் சம்பந்தமான தகவல், புகார்களுக்கு மின்னகம் சேவை மையத்தினை 94987 94987 ல் தொடர்புகொண்டு தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.