டிரைவர்கள் உறுதிமொழி
திண்டுக்கல்: தமிழக அரசுப் போக்குவத்துக்கழகம் திண்டுக்கல் மண்டலத்தில் பயணிகளின் பாதுகாப்பு நலன்கருதி அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க டிரைவர்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திண்டுக்கல் 1, 2 உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் டிரைவர்கள் உறுதிமொழி எடுத்தனர். வத்தலக்குண்டு: அரசு போக்குவரத்து கிளை சார்பில் மேலாளர் நாகபாரதி தலைமையில் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் பயணி களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு டிரைவர், கண்டக்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உதவி பொறியாளர் மோகன், தொ.மு.ச நிர்வாகி சுரேஷ் பங்கேற்றனர்.