உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண் கொலை வழக்கில் போதை ஆசாமி சிக்கினார்

பெண் கொலை வழக்கில் போதை ஆசாமி சிக்கினார்

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகர் அருகே, செப்., 24ம் தேதி, 53 வயது பெண் ஒருவர், அரை நிர்வாண நிலையில், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். வடக்கு தனிப்படை போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஏ.வெள்ளோடுவை சேர்ந்த ஜஸ்டின் திவாகர், 45, என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தவர், நேற்று முன்தினம் இரவு, நாகல்நகர் மேம்பாலத்துக்கு கீழ் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், பாலியல் உறவுக்கு மறுத்ததால், மதுபோதையில் அப்பெண்ணின் தலையில், கல்லை துாக்கிப்போட்டு கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ