மேலும் செய்திகள்
விலை உயர்ந்த வெண்டைக்காய்
29-Oct-2025
ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிலோவிற்கு ரூ.15 அதிகரித்து ரூ.85 க்கு விற்றது. ஒட்டன்சத்திரம், கப்பலப்பட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை சுற்றிய கிராமப் பகுதிகளில் முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு முருங்கை விளைச்சல் அதிகமாக இருந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.50 க்கு விற்பனை ஆனது. மழை காரணமாக முருங்கைச் செடிகளில் இருந்த பூக்கள் அழுகியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைய விலை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ ரூ.70 க்கு விற்பனையாக நேற்று ரூ.15 அதிகரித்து ரூ.85க்கு விற்பனையானது. வியாபாரி ஒருவர் கூறுகையில், இனி வரும் நாட்களில் முருங்கைகாய் வரத்து குறையும் வாய்ப்பு உள்ளதால் விலை இன்னும் அதிகரிக்கும் என்றார்.
29-Oct-2025