டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பழநி:பழநி போலீஸ் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த செல்வகுமார் மதுரை தல்லாகுளம் பகுதியில் துணை கமிஷனராக பணிமாற்றம் செய்யப்பட்டார். தேனி மாவட்டம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த தேவராஜ் பழநி புதிய டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் வரவேற்றனர்.