உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேசிய டேபிள் டென்னிசில் சாதித்த மாணவிகளுக்கு டி.வி.ஆர்., விருது

தேசிய டேபிள் டென்னிசில் சாதித்த மாணவிகளுக்கு டி.வி.ஆர்., விருது

திண்டுக்கல்: குஜராத் மாநிலத்தில் நடந்த 17 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் சின்னாளபட்டி விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் யோகஸ்ரீ, ரச்சிதாதேவி தமிழக அணிகளில் பங்கேற்று முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர். இவர்களுக்கு தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது வழங்கப்பட்டது. திண்டுக்கல் ரோட்டில் உள்ள மாவட்ட கால்பந்து சங்க அலுவலகத்தில் நடந்த இதற்கான விழாவில் திண்டுக்கல் மாடட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன் உதவித்தொகை வழங்கினார். மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் சண்முகம் விருது வழங்கினார். மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க நிறுவனர் ஞானகுரு, டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிரகாஷ்,டேபிள் டென்னிஸ் சங்க உறுப்பினர் தனலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ