உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மூதாட்டி பலாத்காரம் மாற்றுத்திறனாளி கைது

 மூதாட்டி பலாத்காரம் மாற்றுத்திறனாளி கைது

வடமதுரை: வடமதுரை அருகே, 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த மாற்றுத்திறனாளி பால்சாமி, 27, என்பவரை, போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், சுக்காம்பட்டி பாலம்பூசாரியூரை சேர்ந்தவர் பால்சாமி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், தேங்காய் வெட்டும் தொழில் செய்தார். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். நேற்று முன்தினம் பால்சாமி, கரிகால கவுண்டனுார் தோட்டத்து வீட்டில் தனியே வசிக்கும், 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தார். காயமடைந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பகுதியினர் சிலர், பால்சாமியை பிடித்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyan
செப் 04, 2026 05:22

பலாத்காரம் செய்த இவனுக்கு பாவம் , பரிதாபம் எல்லாம் பார்க்காமல் முதலில் இவனை தூக்கில் இடவேண்டும்.


முக்கிய வீடியோ