உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

பட்டிவீரன்பட்டி: சித்தரேவில் நெடுஞ்சாலை , வருவாய் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பில் பணிகள் நடக்கிறது. டோல்கேட்டில் ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. ஆத்துார் நெடுஞ்சாலை உதவிக்கோட்ட பொறியாளர் கண்ணன், உதவிபொறியாளா பரத், சாலை ஆய்வாளர் அருள்சாமி, வருவாய் துறை ஆய்வாளர் நிஷா ஆகியோர் உடனிருந்தனர். பட்டிவீரன்பட்டி எஸ்.ஐ. ஜெயபால் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை