சமத்துவ கொலு
திண்டுக்கல்: நவராத்திரி விழா கொண்டாட்டமாக திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் உள்ள தனியார் நர்சரி பிரைமரி பள்ளியில் சமத்துவ கொலு ஏற்பாடு செய்திருந்தனர். அம்மன், அம்பிகை சிலைகள், தேவர்கள், நவராத்திரி சிறப்புகள் விளக்கும் பொம்மைகளுடன் கிறிஸ்து பிறப்பு விளக்கும் குடில், இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மக்கா நகரில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மசூதியின் காபா அமைப்பும் கொலுவில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பகவத் கீதை, குர்ஆன், பைபிள் ஏற்பாடுகளும் கொலுவில் இடம் பெற்றுள்ளது. கூட்டு பிரார்த்தனையில் மத நல்லிணக்கம், ஒற்றுமை, சகோதரத்துவம் வளர வேண்டும், தீய எண்ணங்கள் அழிந்து நன்மை பிறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.