மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
03-Sep-2025
கொடைக்கானல் : கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கம் மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை,மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 15வது ஆண்டாக நடத்தப்பட்ட முகாமில் லயன் சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலர் சுரேஷ் பால்ராஜ், பொருளாளர் டாக்டர் நீத்துகிரன்,சன் லயன்ஸ் நிறுவனத் தலைவர் டி.பி. ரவீந்திரன், ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு, டி.எஸ்.பி., யுவப்பிரியா கலந்து கொண்டனர். டாக்டர்கள் விஷ்ணு அனுராக் சிகிச்சை அளித்தார். ஒருங்கிணைப்பாளர் ராதா மணவாளன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
03-Sep-2025