கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்டமுடியாத விவசாயி கருப்புசாமி 36, தன் தோட்டத்தில் உள்ள மா மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சாணார்பட்டி அருகே செடிப்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமிக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். இவர் விவசாயத்திற்காக பல இடங்களில் கடன் வாங்கினார். சில ஆண்டுகளாக மா விளைச்சல் சரியாக இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. மன உளைச்சலில் இருந்த கருப்புசாமி தோட்டத்தில் உள்ள மாமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.ஐ., பொன் குணசேகர் விசாரிக்கிறார்.