உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகள் சங்க மாநில மாநாடு

விவசாயிகள் சங்க மாநில மாநாடு

திண்டுக்கல்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் தனியார் மஹாலில் நில உரிமை குடிமனை உரிமை என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. எம்.பி., சச்சிதானந்தம், விவசாய சங்க பொதுச் செயலாளர் விஜூகிருஷ்ணன், ஏ.ஐ.ஏ.டபிள்யூ.யு., பொதுச் செயலாளர் வெங்கட், விவசாய சங்க பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கலந்து கொண்டனர். விஜூகிருஷ்ணன், வெங்கட் கூறுகையில், ''தமிழகத்தில் 70 லட்சம் ஏக்கர் அரசு தரிசு நிலங்கள் உள்ளது. இதனை விவசாய தொழிலாளர்கள் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்''என்றார். சாமி. நடராஜன் கூறுகையில்,'' சென்னை துாய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டவில்லை. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை