உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தலைமையில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலு முன்னிலை வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர் மகுடீஸ்வரன், பழநி ஒன்றியச் செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு ஏரி, குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து தேர்தல் நேரத்தில் முதல்வர் விஜய் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். பின் மத்திய கூட்டுறவு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் சரவணகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !