உள்ளூர் செய்திகள்

ஐவர் ஹாக்கி போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஐவர் ஹாக்கி போட்டி பஞ்சம்பட்டி ஹாக்கி சங்கம் சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 16 அணிகள் பங்கு பெற்றது. இறுதி போட்டியில் முதலிடம் பிடித்த பாண்டியாஸ் ஏ அணிக்கு ரொக்க பரிசும், சுழற் கோப்பையும் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜாமைதீன் வழங்கினார். மாவட்ட ஹாக்கி சங்க துணை தலைவர் ஞானகுரு, பஞ்சம்பட்டி ஹாக்கி சங்க அணி செயலாளர் பிரவின், போட்டியின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ