உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அணைப்பட்டி வைகையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணைப்பட்டி வைகையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிலக்கோட்டை: அணைப்பட்டி வைகை ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களுக்கு வருவாய் ,ஊரக வளர்ச்சி துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத் துள்ளனர். வைகை அணை (71) 69.13 அடியாக உயர்ந்து உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்வதால் 3300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்வதால் வரத்து நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் வைகை ஆற்றங்கரையோரம் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாங்கான இடங்களுக்கு செல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை வருவாய், பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சித் துறை, பிள்ளையார்நத்தம் ஊராட்சி சார்பில் ஊராட்சி செயலர் சின்னச்சாமி தலைமையில் ஊழியர்கள் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை