உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுப முகூர்த்த தினத்தால் விலை உயர்ந்த பூக்கள்: மல்லிகை கிலோ ரூ.1700

சுப முகூர்த்த தினத்தால் விலை உயர்ந்த பூக்கள்: மல்லிகை கிலோ ரூ.1700

திண்டுக்கல்: சுப முகூர்த்த தினத்தால் பூக்கள் விலை உயர்ந்து விற்கப்படுகிறது . மல்லிகை கிலோ ரூ.1700க்கு விற்பனையானது. திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் டன் கணக்கிலான பூக்களை வியாபாரிகள், பொதுமக்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து பிறமாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினசரி செல்கிறது. கந்தசஷ்டி விழா துவங்கியதாலும் ஐப்பசி மாதம் முதல் வளர்பிறையில் வரும் தொடர் சுபமுகூர்த்தம் நாட்களாலும் பூக்களின் விலை நேற்று உயர்ந்திருந்தது. மல்லிகை கிலோ ரூ.1200 முதல் 1700 வரை விற்பனையானது. இதுபோல் ஜாதிப் பூ ரூ.500, முல்லைப்பூ ரூ.700, காக்கரட்டான் ரூ.500, சம்பங்கி ரூ.70, செவ்வந்தி ரூ.120, செண்டுமல்லி ரூ.25, ரோஸ் ரூ.130, கோழிக் கொண்டை ரூ.50 என விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை