மேலும் செய்திகள்
பூக்கள் விலை குறைந்தது
10-May-2025
திண்டுக்கல்: தொடர் முகூர்த்த தினங்கள் வருவதால் நேற்று முன்தினம் வரை கிலோ ரூ.300 க்கு விற்ற மல்லிகை பூ நேற்று ரூ.800 முதல் ரூ.1000 ஆயிரம் வரை விற்பனையானது.திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுப்பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி, செம்பட்டி, வெள்ளோடு. மைலாப்பூர், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில் இன்றுமுதல் தொடர் முகூர்த்தம் நாள் வருவதால் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது. நேற்று வரை கிலோ ரூ.300 க்கு விற்ற மல்லிகை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. இதேபோல்முல்லைப்பூ ரூ.400, கனகாம்பரம் ரூ. 500, ஜாதிப்பூ ரூ. 350 அரளிப்பூ ரூ. 200,சம்பங்கி ரூ.100, செவ்வந்தி ரூ. 200,செண்டுமல்லி ரூ.30,ரோஸ் ரூ.100, கோழிக்கொண்டை ரூ.70என விற்பனையாகிறது. முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதால் விலை இன்னும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
10-May-2025