மேலும் செய்திகள்
குடகனாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
10-Nov-2024
பெண்ணை ஆற்றில் கழிவுநீர் தமிழக அரசு விழிக்குமா?
26-Oct-2024
வேடசந்துார்: குடகனாற்றில் உள்ள லட்சுமணன்பட்டி தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீர் நுரையுடன் வெளியேறுவதால் ஆற்றுநீரில் ரசாயன கலப்பு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் 27 அடி கொண்ட குடகனாறு அணை உள்ளது. இங்கிருந்து திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில்9 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது. இந்நிலையில் குடகனாற்றின் கரையோர வழிப் பாதையில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவானதால் அதில் ஏற்படும் கழிவுநீர், ராட்சத தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு மழை காலங்களில் ஆற்று நீர் வெளியேறும் போது அதில் திறந்து விடுவதாக தொடர் புகார் எழுகிறது.இதனால்தான் குடகனாற்று நீர் நுரையுடன் வருவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். குடகனாறு ஆற்று நீரை பயன்படுத்தும் பொதுமக்கள்,விவசாயிகளின் நலன் கருதி லட்சுமணன்பட்டி அணைப்பகுதியில் வெளிவரும் நுரை கலந்த நீரை ஆய்வுக்கு அனுப்பி அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதேபோல் கழிவு நீரை கலந்து விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
10-Nov-2024
26-Oct-2024