உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மதுரையை சேர்ந்த வனத்துறை அதிகாரி அலுவலகத்தில் இறப்பு

மதுரையை சேர்ந்த வனத்துறை அதிகாரி அலுவலகத்தில் இறப்பு

வடமதுரை : மதுரையை சேர்ந்த வனத்துறை அலுவலர் மணிகண்டன் 51, திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வனச்சரக அலுவலக்தில் பணி நேரத்தில் இறந்தார்.கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர் அய்யலுார் வனச்சரக அலுவலர் மணிகண்டன் 51. இவர் தற்போது மதுரை கே.கே.நகர் பகுதியில் வசிக்கிறார். அய்யலுார் வன அலுவலக குடியிருப்பில் தனியே தங்கியிருந்த இவர் வாரம் ஒருமுறை மதுரை சென்று திரும்புவது வழக்கம்.நேற்றுமுன்தினம் ஞாயிறு விடுமுறையில் வெளியூர் சென்றுவிட்டு நேற்று காலை அலுவலகத்திற்கு வந்து இருக்கையில் அமர்ந்திருந்தபோது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். ஊழியர்கள் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றபோது வழியிலே மணிகண்டன் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ