உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2026 ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வாய்ப்பு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு

2026 ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வாய்ப்பு முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்: ''2026 ல் அ.தி.மு.க., ஆட்சி மலருவதற்கு பொன்னான வாய்ப்பு அமைந்து ள்ளது''என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். அ.தி.மு.க., பூத் கிளைகள் மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்லில் ஒன்றியம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. போலீஸ் ஸ்டேஷன்களிலே தி.மு.க., வினர் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். போதைப் பொருட்கள் பழக்கம் அதிகமாக இளம் தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். இந்த ஆட்சி எப்போது வீட்டிற்கு போகும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 2026 ல் அ.தி.மு.க., ஆட்சி மலருவதற்கு பொன்னான வாய்ப்பு அமைந்துள்ளது. எனவே நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும் என்றார். இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் வி.டி.ராஜன், மாவட்ட பாசறை செயலாளர் சிவபாரதி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கவுதம், கலைப்பிரிவு செயலாளர் ரவிக்குமார், எம். ஜி. ஆர்., மன்ற இணை செயலாளர் முத்துசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி