உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நவீன காலத்திற்கு ஏற்ப அப்டேட் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அட்வைஸ்

நவீன காலத்திற்கு ஏற்ப அப்டேட் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அட்வைஸ்

திண்டுக்கல்:தற்போதைய நவீன காலத்திற்கேற்ப வாட்ஸ் ஆப் குழு போன்றவற்றின் மூலம் பிரசாரம் செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அறிவுறுத்தினார். திண்டுக்கல்லில் நடந்த சட்டசபை தொகுதி பூத் ஏஜன்ட் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது : பூத் கமிட்டி செயலாளர்கள், வார்டு செயலாளருடன் இணைந்து வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை வாட்ஸ் ஆப் குழு போன்றவற்றை நாம் அமைத்தது கிடையாது. நவீன காலத்தில் இந்த குழுக்கள் அத்தியாவசியமாகிவிட்டது. அதற்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆகுங்கள். வாட்ஸ் ஆப் குழு மூலமாக ஓட்டு சேகரிக்க வேண்டியுள்ளது. சமூக வலைதளங்கள் தான் முக்கிய பிரசார களமாக மாறிவிட்டது. முதல் தலைமுறை வாக்களர்கள் தொடங்கி அனைவருமே சமூக வலைதளங்களில் உள்ளனர். தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்தி மக்களை சந்திக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை