இலவச மருத்துவ முகாம்
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் கே.டி. மருத்துவமனை சார்பில் கே.அத்திக்கோம்பையில் நடந்த இலவச பொது மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். கே. பாலு, துணைச் செயலாளர் முருகானந்தம், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சவுந்தர பாண்டியன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், பேபிபெருமாள், செல்லம்மாள் தண்டபாணி, சுமதி வீரன், கிளைச் செயலாளர்கள் ராமசாமி, சண்முகசுந்தரம், சரவணன், பாலசுப்பிரமணி, வேலன், அண்ணாதுரை கலந்து கொண்டனர்.