உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அம்மன் கோயில்களில் பவுர்ணமி வழிபாடு

அம்மன் கோயில்களில் பவுர்ணமி வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பவுர்ணமியை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநிரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விளக்கு பூஜை, அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலிலும் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கன்னிவாடி : சோமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, வாலை சக்தி அம்மன், போகர், முத்தானந்தர், வாலையானந்தர், குண்டலினி சித்தர்களுக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சாணார்பட்டி : கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் பூஜைகளை நடத்தினார். திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நத்தம் மாரியம்மன் கோயில், கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், ராக்காச்சி அம்மன் கோயில், திருமலைகேணி சுப்பிரமணியசுவமி கோயில், அசோக் நகர் பகவதி அம்மன் கோயில், மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் ,கர்ணம் தெரு மதுர காளியம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி