மேலும் செய்திகள்
ஐபோனை ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
06-Jan-2026
ஒட்டன்சத்திரம்: பரப்பலாறு அணை, தலையூற்று அருவியை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ.16.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை, விருப்பாச்சி தலையூற்று அருவியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கைவைத்தனர். இதனை நிறைவேற்றித் தருமாறு அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பரப்பலாறுஅணை, தலையூற்று அருவியை சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக்க ரூ.8.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய முதற்கட்டமாக ரூ.16.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
06-Jan-2026