உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆமைவேகத்தில் நகரும் காந்தி மார்க்கெட் கட்டடப் பணி

ஆமைவேகத்தில் நகரும் காந்தி மார்க்கெட் கட்டடப் பணி

பழநி காந்தி மார்க்கெட்டை புதுப்பித்து கட்ட 2023 ஆகஸ்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ 11.32 கோடி மதிப்பிடு செய்யப்பட்டு பார்க்கிங், கீழ்த்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று தளங்களில் அனைத்து வசதிகளுடன் 150 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டன. ஆனால் பணிகளில் துரிதம் இல்லாமல் முடங்கி கிடக்கிறது . இதற்கான நிலுவைத் தொகை முறையாக வழங்காததால் பணி நிறுத்தப்பட்டுள்ளதாம். நகராட்சி நிர்வாகம் இதன் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.விரைவில் பயன்பாட்டிற்கு வரும்நகராட்சி கட்டட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. நிலுவை தொகைகள் அனைத்தும் விடுவிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட உள்ளது. உடனடியாக பணிகள் துவங்கி விரைவில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.உமா மகேஸ்வரி, நகராட்சி தலைவர்,பழநி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை