மேலும் செய்திகள்
ரோட்டில் குவிந்த மணலால் தொடரும் விபத்து
2 hour(s) ago
அர்ச்சகர்களுக்கு நல வாரியம் பிராமண ஸமாஜம் தீர்மானம்
5 hour(s) ago
அரசு பஸ்சிற்குள் கொட்டிய மழைநீர்
8 hour(s) ago
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இக்கட்சி சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடந்த 20க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று நாயுடுபுரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நீர்நிலையில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வடமதுரை: வடமதுரையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. இக்கட்சி சார்பில் பல்வேறு கிராமங்களில் சதுர்த்தி விழாவிற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் நேற்று வடமதுரை ஆஞ்சநேயர் கோயில் அருகில் கொண்டு வரப்பட்டன. சித்தர் பேரவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் சுவாமிகள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்தனர். கடை வீதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில தொண்டரணி தலைவர் மோகன், ஒன்றிய தலைவர் ஐயப்பன், செயலாளர் ராஜாராம் உட்பட நிர்வாகிகள் பேசினர். பின்னர் சிலைகள் ஊர்வலமாக நான்கு ரத வீதிகள் வழியே வந்து நரிப்பாறை குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன. வேடசந்துார்: வேடசந்துாரில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. ஆர்.எச்., காலனி விநாயகர் கோயில் முன்பு துவங்கிய ஊர்வலம் சாலைத்தெரு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வழியாக ஆத்துமேடு சென்றடைந்தது. கும்மி நடனம், முளைப்பாரி ஊர்வலம், செண்டை மேளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அடைக்கனுார் குடகனாற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். கலை இலக்கிய பிரிவு மாநில தலைவர் கனல்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழநி: பழநியில் சிவசேனா, ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து தமிழர் கட்சி, ஹிந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. எம்.எல்.ஏ., ரவிமனோகரன் பங்கேற்றார். பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் சிவசேனா தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜ்சிங்சந்தேல், மாநில தலைவர் மணிபாரதி, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் பங்கேற்றனர். ஆண்டவன் பூங்கா ரோடு ரவுண்டானா பொதுக்கூட்டத்தில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றார். அடிவாரம் பாலாஜி ரவுண்டானா பகுதியில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவை ரோட்டில் சண்முக நதியில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. எஸ்.பி.,ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி.,கருணாகரன், டி.எஸ்.பி., தேவராஜ் மேற்பார்வையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
2 hour(s) ago
5 hour(s) ago
8 hour(s) ago