உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் ராட்சத காற்றாடி விழா

கொடை யில் ராட்சத காற்றாடி விழா

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை விழாவை சிறப்பிக்கும் வகையில் கண்கவர் ராட்சத காற்றாடி நிகழ்ச்சி மன்னவனுாரில் நடந்தது.தற்போதைய கோடை விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தில் ராட்சத காற்றாடி பறக்க விடும் நிகழ்ச்சி நடந்தது. மே 25 வரை காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கிறது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ