மேலும் செய்திகள்
இறந்தவர் உடலைவாங்க மறுத்து மறியல்
17-Jul-2025
செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் பெண் பலியானார். அவரது தாய், தந்தை, தம்பி காயங்களுடன் தப்பினர். வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி 29. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் மருத்துவமனை செல்ல நேற்று காலை ஆட்டோவில் புறப்பட்டார். அவருடன் தந்தை ராமன் 55, தாயார் கருப்பாயி 51, தம்பி ஜெயராம் 27, உடன் சென்றனர். ஆட்டோவை ஜெயராமே ஓட்டினார். வத்தலக்குண்டு - -செம்பட்டி ரோட்டில் பாளையங்கோட்டை விலக்கு அருகே திண்டுக்கல்லில் இருந்து குமுளி சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ராஜலட்சுமி பலியானார். ஜெயராம், ராமன், கருப்பாயி காயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Jul-2025