அரசு அலுவலர்கள் கூட்டம்
திண்டுக்கல் : தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட நிர்வாக குழு கூட்டம் பழநி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் முகமது ரபீக், துணைத்தலைவர்கள் பொன்.இளங்கோ, பூமிபாலன், முன்னாள் மாநில பொதுச்செயலர் தேவேந்திரன், வருவாய்துறை நேரடி நியமன அலுவலர் ரெங்கராஜ், சுகாதார ஆய்வாளர் சங்க முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சந்திரமோகன் பங்கேற்றனர். அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். சங்கத்தின் வட்டக்கிளை நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.