குரூப் 2 தேர்வு; ஆப்சென்ட் 3708
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வினை 12,224 பேர் எழுதிய நிலையில் 3,708 பேர் எழுதவில்லை. டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 2, 2ஏ) பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில், குருப் 2 தேர்வெழுத 15,932 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 27 நடமாடும் குழுக்கள், 8 பறக்கும் படை, 86 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வுக்கு விண்ணப்பித்த 15,932 பேரில் 12,224 தேர்வு எழுதினர். 3,708 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு கலைக்கல்லுாரி தேர்வு மையத்தில் டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.