உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கம்

நத்தம்: நத்தம் அருகே ஊராளிபட்டியில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், 'அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தி கையெழுத்து இயக்க துவக்க விழா நடந்தது. ஒன்றியத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். ஊராளிபட்டி கிராம மக்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர். மா.கம்யூ., ஒன்றியச் செயலாளர் குழந்தைவேல் உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ