உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கனரக வாகனங்கள் பின்புறம் இல்லை ரிப்ளெக்டர்: விபத்துக்களில் சிக்கும் பின்னால் வரும் வாகனங்கள்.. முறைப்படுத்தலாமே

கனரக வாகனங்கள் பின்புறம் இல்லை ரிப்ளெக்டர்: விபத்துக்களில் சிக்கும் பின்னால் வரும் வாகனங்கள்.. முறைப்படுத்தலாமே

மாவட்டத்தில் பெரு நகரங்களை இணைக்க அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. பெரும்பாலான கனரகம் இலகு ரக சரக்கு வாகனங்களில் பின்புறம் 'ரிப்ெளக்டர் 'இல்லாததால் இரவு நேர பயணத்தின் போது பின்னால் வரும் வாகனங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. பெரும்பாலும் ரிப்ளெக்டர் சேதமடைந்துள்ளன. சரக்கு வாகனங்களில் தார்ப்பாய் கட்டப்படும் போது மறைக்கப்படுகின்றன. இதனால் நான்கு வழிச்சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் முன்னால் செல்லும் ரிப்ளெக்டர் இல்லாத வாகனங்களை அறிந்து கொள்ள போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்களில் பின்புறம் ரிப்ளெக்டர் இல்லாமல் செல்கின்றனர். டூவீலர்களில் 'டேல் லைட்' பெரும்பாலும் எரிவதில்லை இரவு நேர பயணத்தின் போது பின்னால் வரும் இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள் டூவீலர்களை அறிந்து கொள்ள முடியாமல் விபத்தைஏற்படுத்துகின்றன. இவற்றை தவிர்க்க போக்குவரத்து துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ