மேலும் செய்திகள்
அமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம்
11-Apr-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் வட்டார இருசக்கர மோட்டார் சைக்கிள் பழுது நீக்குவோர் நலச்சங்கம் சார்பில் நடந்த மே தின விழாவில் ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சங்கத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுசீந்திரன், பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது ரபீக் வரவேற்றார். கவுரவ தலைவர் சாகுல் ஹமீத் கொடியேற்றி வைத்தார். ஒட்டன்சத்திரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜ் ஹெல்மெட்களை வழங்கினர். டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் திருமுருகானந்தம் கலந்து கொண்டார். துணைச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
11-Apr-2025