மூதாட்டி மீது சுடுதண்ணீர் வீச்சு
குஜிலியம்பாறை: கரிக்காலி பிரபகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தனியார் பள்ளி ஊழியர் மல்லிகா 55. இரு மகன்களுக்கும் திருமணம் ஆகி தனியாக சென்ற நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பொன்னம்மாள் 60,க்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் மல்லிகா நேற்று குடத்தில் தண்ணீர் பிடித்தபோது இவர் மீது பொன்னம்மாள் சுடுதண்ணீரை ஊற்றினார். மல்லிகா படுகாயமடைந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரித்தனர்.