வேன் மோதி கணவன் மனைவி காயம்
நத்தம்: சின்னையாபுரத்தை சேர்ந்தவர் கரந்தன் 35. தனது டூவீலரில் மனைவி வனிதாவுடன் நத்தம் நோக்கி சென்றார்.குமரபட்டி பிரிவு அருகே சென்ற போது பின்னால் வந்த திருச்சி- துறையூரை சேர்ந்த முத்து 23, ஓட்டி வந்த வேன் பைக் மீது மோதியது. துாக்கிவீசப்பட்ட கணவன், மனைவி இருவருக்கும் தலை, கை, காது,கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.