உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருக்குறள் திருப்பணிகள் துவக்க விழா

திருக்குறள் திருப்பணிகள் துவக்க விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் தொடக்க விழா நடந்தது. திருக்குறள் வாழ்வியலாக்கப் பயிற்சியாளர் , திட்டப் பயிற்றுநர் செல்வன் வரவேற்றார். திண்டுக்கல் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் இளங்கோ நோக்கம் குறித்து பேசினார் அரசின் தமிழ் செம்மல் விருதாளர் இளங்கோவன் திருக்குறள் திருப்பணிகளை தொடங்கி வைத்தார். ஒட்டன்சத்திரம் கே. ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி, திட்ட பயிற்றுநர் கருணாநிதி, திண்டுக்கல் கம்பன் கழகச் செயலாளர் ராமசாமி பேசினர். உதவி தலைமை ஆசிரியர் காளிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி