உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கண்காணிக்க அறிவுறுத்தல்

கண்காணிக்க அறிவுறுத்தல்

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிக்கை : கோடை விடுமுறை காலங்களில் ஏரி, குளம், ஆறு, குட்டை, அணை, கிணறு, கல்குவாரிகளில் தேங்கிய நீரில் சிறுவர்கள் குளிக்க செல்கின்றனர். ஆழம் தெரியாத இடங்களில் குளிக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 2023ல் 19 , 2024-ல் 40 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் குளிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள், இறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வருவாய்த் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பங்கள் நிகழாமல் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கண்காணித்து பாதுகாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை