தாண்டிக்குடி மலைப்பகுதியில் மலைப்பாம்புகள் படையெடுப்பு
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் மலைப்பாம்புகள் படையெடுப்பால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.தாண்டிக்குடி கானல்காடு ராமர் கோயில் வளைவு அருகே சில தினங்களாக ரோட்டில் மலைப்பாம்புகள் முகாமிட்ட நிலையில் உள்ளன. ரோட்டை கடந்து செல்வோரை அச்சுறுத்தும் வகையில் சீண்டுகிறது.வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த அதிகாரிகள், 'இதுவரை மலைப்பகுதியில் மலைப் பாம்பு நடமாட்டம் இருந்ததாக தெரியவில்லை. இவை வெப்ப மண்டல பகுதியில் மட்டுமே இருக்கும். தற்போது புதிதாக வந்துள்ள மலைப்பாம்புகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம் ''என்றனர்.