பால் சொசைட்டிகளில் முறைகேடு
குஜிலியம்பாறை: கூட்டுறவு பால் சொசைட்டியில் கணினியை கைவிட்டு நோட்டு போட்டு எழுதுவதால் முறைகேடுக்கு வாய்ப்பு உருவாகும் என பால உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கூட்டுறவு பால் சொசைட்டிகளில் ஏப்ரல் வரை ஒரு விவசாயி 10 லிட்டர் பால் கொண்டு வந்தால் அதை எடைபோடும் மெஷினில் ஊற்றி கிலோ கணக்காக வருவதை லிட்டர் கணக்காக மாற்றி பாலில் உள்ள கொழுப்பு , இதரச்சத்து அளவீடுகளை குறிக்க லிட்டர் என்ன விலை என இரண்டு நிமிடங்களில் மெசேஜ் வந்துவிடும். பால் ஊற்றவரும் விவசாயிகள் காத்திருக்க தேவையில்லை.ஆனால் தற்போது மெஷினில் லிட்டர் அளவீடுகளை மட்டுமே கணக்கிட்டு , கொழுப்பு, இதர சத்து விலை விபரங்களை நோட்டு போட்டு கையால் எழுதி வருகின்றனர். இதனால் விவசாயிகள் ஒரு மணி நேரம் காலதாமதம் ஆவதாக குமுறுகின்றனர். மேலும் மற்ற தகவல்களை முறையாக தெரிவிக்காமல் 10 நாட்களுக்கு ஒரு முறை பில்தொகை மட்டுமேகொடுக்கின்றனர்.பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் ஏ.ராஜரத்தினம் கூறியதாவது:கணினி வைத்து கணக்கீடு செய்த போது காலதாமதம் , முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. பாலை ஊற்றிவிட்டு திரும்புவதற்குள் மெசேஜ் வந்துவிடும். ஆனால் தற்போது இந்த முறையை விட்டு நோட்டு போட்டு கையால் எழுதுகின்றனர். இதனால் முறைகேட்டிற்கு 100 வாய்ப்புள்ளது .விவசாயிகளும் காலதாமதத்தால் பாதிக்கப்படுகின்றனர். மீண்டும் பழைய முறையில் கணினியை பயன்படுத்த வேண்டும்என்றார்.