உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மல்லிகைப்பூ ரூ.4,200 திண்டுக்கல்லில் விற்பனை

மல்லிகைப்பூ ரூ.4,200 திண்டுக்கல்லில் விற்பனை

திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு வேடசந்துார், தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை கொண்டு வருகின்றனர். மழை, பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்தது.புத்தாண்டு, மார்கழி வழிபாடுகளால் தேவை அதிகரித்தது. இதனால் விலை அதிகரித்துள்ளது.கிலோ முல்லை பூ, 1,100 ரூபாய், கனகாம்பரம், 1,000 ரூபாய், ஜாதிப்பூ, 800 ரூபாய், காக்கரட்டான், 750 ரூபாய், அரளி, 300 ரூபாய், பட்டன் ரோஜா, 300 ரூபாய், ரோஜா, 300 ரூபாய்க்கு விற்பனையானது. மல்லிகை நேற்று கிலோ, 4,200 ரூபாய்க்கு விற்பனையானது.

3,000 ரூபாய்

கோயம்பேடு சந்தைக்கு, திருவள்ளூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, நிலக்கோட்டை, ஊட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வரத்து உள்ளது.புத்தாண்டை முன்னிட்டு, கோயம்பேடு பூ சந்தையில், நேற்று வழக்கத்தை விட மக்கள் கூட்டமும் அதிகம் காணப்பட்டது. இதனால், கடந்த நாட்களைவிட விலை அதிகரித்து காணப்பட்டது. இதில், மொத்த விலையில், சாமந்தி ஒரு கிலோ, 80 - - 160 ரூபாய்க்கும், சாக்லேட் ரோஸ் -- 240, பன்னீர் ரோஸ் -- 160, மல்லி -- 3,000, முல்லை -1,500 -- 1,800, கனகாம்பரம் - - 1,000, ஜாதி -- 1,000 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !