பூங்காவில் கூட்டு துப்புரவு பணி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆர்.எம்., காலனி முதல் குறுக்குத் தெரு பூங்காவில் கூட்டு துப்புரவு பணி நடந்தது. பிளாஸ்டிக் குப்பை, கழிவுகள், களைச் செடிகள் வெட்டி அகற்றப்பட்டன. தொடர்ந்து பூங்காவிற்கு வந்த பொது மக்களிடம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. துப்புரவு பணிகளை மாநகராட்சி கமிஷ்னர் பிரேம் ஆனந்த், ஆர்.டி.ஓ.,பழனிவேல், சுகாதார அலுவலர் முருகானந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.