உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அனைத்து பணியிடங்களிலும் புகார் குழு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அறிவுறுத்தல்

அனைத்து பணியிடங்களிலும் புகார் குழு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அறிவுறுத்தல்

திண்டுக்கல்: ''பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்கப்படுவது கட்டாயம் ''என தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குநர் புகழேந்தி அறிவுறுத்தி உள்ளார்.அவரது செய்திகுறிப்பு: 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. வேலையளிப்பவருக்காக வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற தவறும்பட்சத்தில் அந்த வேலையளிப்பவர் மீது ரூ. 5,00,000 வரை அபராதம் விதிக்க சட்ட வழி வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்சாலைகள் ,கட்டுமான பணியிடங்களில் வேலையளிப்பவர்களால் உடனடியாக உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும். வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். உள்ளக குழுவின் உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் , தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள் ஆகியவற்றில் பாலியல் துன்புறுத்துதல் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள், பணியிடத்தின் அனைத்து பணியாளர்களும் தெளிவாகக் காணக்கூடிய இடத்தில் காட்சிபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !