உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டோலி கட்டி தூக்கிச்சென்றும் பெண் உயிரை காப்பாற்ற முடியவில்லை; கொடைக்கானல் கிராமத்தினர் கண்ணீர்!

டோலி கட்டி தூக்கிச்சென்றும் பெண் உயிரை காப்பாற்ற முடியவில்லை; கொடைக்கானல் கிராமத்தினர் கண்ணீர்!

கொடைக்கானல்: உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, 8 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்றும், உயிரைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தினர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.கொடைக்கானலில் ரோடு வசதி இல்லாத தொலைதூர கிராமமாக இருப்பது வெள்ளகெவி கிராமம். கொடைக்கானலை கண்டறிய முதன் முதலில் ஆங்கிலேயர்கள் இக்கிராமத்தை கடந்தே வந்துள்ளனர். இருந்த போதும் கிராமத்திற்கு ரோடு வசதி என்பது கானல் நீராக உள்ளது. உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானல், அல்லது அதே நேரத்தில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளத்திற்கு டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e6h84o6s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2021ல் கிராம மக்களின் 50 ஆண்டு கோரிக்கை ஏற்று கொடைக்கானல் ஆர்.டி.ஓ.,வாக இருந்த முருகேசன் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் ரோடு அமைக்க உத்தரவிட்டார். ஆனால் பணி முடியவில்லை. ரோடு அமைக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதி அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அவை அனைவரும் மறந்து விடுகின்றனர். சாலை வசதி இல்லாததால் கிராம மக்களின் துயரம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இந்த நிலையில், வெள்ள கவி கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் மனைவி மேகலா 35 , நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கிராமத்தினர் டோலி கட்டி 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கும்பக்கரை பகுதிக்கு தூக்கி சென்று அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார். தொடரும் துயரத்திற்கு தீர்வாக தங்களுக்கு ரோடு வசதி தேவை என்று இக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

D.Ambujavalli
மார் 14, 2025 06:17

ஒட்டுக்கேட்க மட்டும் இத்தகைய கிராமங்கள் நினைவுக்கு வரும். மற்றபடி அவர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன , ezhaikal இந்த உயிர் என்றால் அவ்வளவு அலட்சியம்


kulandai kannan
மார் 13, 2025 22:54

வசதிகளைத் தேடி மனிதர்கள் நகர்வதுதான் நாகரீகம். வனாந்திர பிரதேசங்களில் வசித்தால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது.


Ray
மார் 13, 2025 19:56

ஐம்பது ஆண்டுகால கோரிக்கையை அந்த எம்ஜியார் கூட கண்டுக்கலை போல தெரிகிறது 21 ல் தேர்தலுக்கு முன் ஒருத்தர் உதவலாம்னு வந்தார் இப்போ தேர்தல் வருவதால் சவுண்ட் உடுறாங்க போல தெரிகிறது ஆளாளுக்கு மைக்க புடிச்சுடுவானுங்க தேர்தலுக்கு கவனிச்சுடுங்கப்பா அந்த ஊர்க்காரனுங்க சைலன்ட் ஆய்டுவாங்க ரோடாவது மண்ணாவது நாடகமே இந்த உலகம்


Ramesh Sargam
மார் 13, 2025 19:50

தமிழக முதல்வரே இதுபோன்ற அவலங்களுக்கு நீங்கள் தலைகுனியவேண்டும். கிராமத்தினர் வாக்குகள்தான் உங்களுக்கு முக்கியம். அவர்கள் உயிர் அல்ல. தேர்தல் சமயத்தில் பல இலவசங்களை கொடுத்து அவர்கள் வாக்குகளை பெற்று விட்டு தேர்தலில் ஜெயிப்பது முக்கியமல்ல. இலவசங்களுக்கு பதில் சரியான ரோடு வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி செய்து கொடுத்து அவர்கள் வாக்குகளை பெற்று ஜெயிக்கவேண்டும். அதுதான் நேர்மையான வெற்றி. உங்களிடம் போய் நேர்மையை பற்றி பேசுவது என்னுடைய தவறு.


Padmasridharan
மார் 13, 2025 19:28

Metro work முடிஞ்சு கட்டிய பாலங்கள் எல்லாம் உடைத்து, அடுத்த தேர்தலுக்கு முன் அறிவிப்பாங்களோ என்னவோ. இங்க tasmac தான் முக்கியம் road map அல்ல என்று நினைக்கிறார்களோ. கள்ள சாராயம் குடிச்சு இறந்தவர்களுக்கு லட்சக்கணக்குல பணம் கொடுத்தது ஞாபகம் படுத்தவும்


Murthy
மார் 13, 2025 19:17

8 கி. மீ அல்லது 11 கி.மீ ரோடு போட வக்கில்லாத ஆட்சி நிர்வாகம் .....


Svs Yaadum oore
மார் 13, 2025 19:10

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, 8 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி செல்லும் நிலைமை .....50 ஆண்டு கோரிக்கை ,மற்றும் ரோடு அமைக்கப்படும் என ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதி.....ஆனால் ரோடு இன்றுவரை கானல் நீர் .....ஆனால் இதெல்லாம் வடக்கன் மாநிலத்தில்தான் இப்படி நடக்கும் ....விடியல் ஆட்சியில் தமிழ் நாடு எப்போதோ முன்னேறிய மாநிலமாக மாறி விட்டது ...தமிழ் நாட்டை முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் ...வடக்கன் மாநிலத்துடன் ஒப்பிட முடியது ..


RAMKUMAR
மார் 13, 2025 17:32

இது மாதிரியான இடங்களில் மக்களை வீடு கட்டி இருக்க அனுமதிக்க கூடாது . காடு என்பது , மானுடன் மனிதன் வாழ உகந்த இடம் அல்ல


முக்கிய வீடியோ