நத்தம் கோயிலில் விளக்கு பூஜை
நத்தம் : -நத்தம் அசோக்நகர் பகவதியம்மன் கோயிலில் மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து கோயில் வளாகத்தில் உலக நன்மை , மழை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.