உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் நில வெடிப்பு புவியியல் துறையினர் ஆய்வு

கொடைக்கானலில் நில வெடிப்பு புவியியல் துறையினர் ஆய்வு

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கிளாவரை வனப்பகுதி பாசன வாய்க்காலில் ஏற்பட்ட நில வெடிப்பு குறித்து புவி தொழில் நுட்ப மைய உதவி இயக்குனர் சுந்தரராமன் ஆய்வு செய்தார்.கொடைக்கானல் கிளாவரை வனப்பகுதியில் செருப்பன் ஓடை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ளது. அங்கு நர்சரிகொடை பைன் மரக்காடுகள் பகுதி நீர்வழித்தடத்தில் ஆழமான நில வெடிப்பு இருந்ததை விவசாயிகள் பார்த்தனர். தகவலறிந்த ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் பார்வையிட்டனர். இதை தொடர்ந்து புவி தொழில் நுட்ப மைய உதவி இயக்குனர் சுந்தரராமன் ஆய்வு செய்தார். சுந்தரராமன் கூறியதாவது: கிளாவரை பகுதியில் பாசன வாய்க்காலில் 82 மீட்டர் நீளம், 5 மீட்டர் ஆழத்திற்கு வெடிப்பு செல்கிறது. ஒரு மாதத்திற்கு முன் இது ஏற்பட்டிருக்கலாம். இதுகுறித்த செயற்கைக்கோள் படமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பெரிதாக இல்லை என்றாலும் விவரங்கள் சேகரிக்கப்படு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !