உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வில்பட்டியில் நிலச்சரிவு அபாயம்: இயந்திர பயன்பாடு படு ஜோர்

 வில்பட்டியில் நிலச்சரிவு அபாயம்: இயந்திர பயன்பாடு படு ஜோர்

கொடைக்கானல்: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் தாழ்வான பகுதியில் இயந்திரம் மூலம் நிலச்சீரமைப்பு மேற்கொள்வதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக வில்பட்டி உள்ளது. கொடைக்கானலுக்கு அருகிலுள்ள ஊராட்சியான இங்கு ஏராளமான செல்வந்தர்கள் நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். இதில் சொகுசு பங்களாக்கள், அனுமதி பெறாத காட்டேஜ்களையும் கட்டமைத்து வணிக நோக்கில் செயல்படுகின்றனர். முதற்கட்டமாக தடை செய்யப்பட்ட இயந்திரங்களான பொக்லைன், மண் அள்ளும் இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திரங்கள் மறைத்து வைக்கும் இடமாக வில்பட்டி உள்ளது. இதனால் இப்பயன்பாடுகள் இப்பகுதியில் தாராளமாக உள்ளது. அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஊராட்சி நுழைவுப் பகுதியில் மெயின் ரோட்டோரம் வணிக பயன்பாட்டு நோக்கத்துடன் சரிவான பகுதியில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் நிலங்கள் குடைய நிலச்சரிவு அபாயம் உள்ளது. வில்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றி நடந்து வரும் இயந்திர பணிகளை ஆய்வு செய்து மலைத்தள பாதுகாப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை